சூடான செய்திகள் 1

கொழும்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனங்களை செலுத்துவோரை கைதுசெய்யும் நோக்கில் இரவு நேர விடுதிகள் அமைந்துள்ள இடங்களை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேர விடுதிக்கு சென்று திரும்புபவர்கள், மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேல் மாகாணம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி; இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

வெடிப்புச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு