உள்நாடு

கொழும்பிலுள்ள 60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

(UTV|கொழும்பு)- கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் அநாவசியமான முறையில் நடமாடிய 60 யாசகர்களை வீரவில தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன மற்றும் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பொலிஸ் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட யாசகர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாட்டினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் , உணவு உள்ளிட்ட தங்குமிட வசதிகளிலின்றி குறித்த யாசகர்கள் கொழும்பு புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அநாவசியமாக நடமாடியதாக நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த காரணிகளை கருத்திற் கொண்ட நீதவான்கள் குறித்த யாசகர்களை வீரவில தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளனர்.

Related posts

மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனகவை நீக்க பாராளுமன்றில் பிரேரனை – சஜித் போர்க்கொடி

எதிர்வரும் செவ்வாயன்று முதல் இரவு வேளைகளில் மின்துண்டிப்பு

“நான் அவன் இல்லை” – அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor