உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –   பிரதான நீர் குழாய் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட மொரகஸ்முல்ல – இராஜகிரிய – நாவல வீதி மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவிலிருந்து வரும் பிரதான நீர் குழாய் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இது ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்

மங்கி பொக்ஸ் தொற்று : சுகாதார துறை விசேட அறிவிப்பு!

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்