உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (30) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 02, 03, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாளம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாகந்த வரையிலான நீர் விநியோக பிரதான குழாயில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உதைத்துத் திறக்கும் பொலிஸ் அதிகாரி – நெல்லியடியில் நடந்தது என்ன?

editor

பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை!

editor