கிசு கிசு

கொள்ளுப்பிட்டி பிராண்டிக்ஸ் 07 பேருக்கு கொரோனா : ஒருவர் தெஹிவளை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை கிளையின், கொள்ளுப்பிட்டி பிரதான அலுவலகத்தில் 07 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு தொடர்பிலான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில், தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

அவரது மனைவி களுபோவில வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர் எனவும் இந்நாட்களில் மகப்பேறு விடுமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இவர்கள் கடந்த 27ம் திகதி கொழும்பு புத்தக கண்காட்சிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SLPP மூவருக்கு அமைச்சு பதவி

சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா?

பலதார திருமணத்திற்கு முற்றுப்புள்ளி