உள்நாடு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 % ஆல் குறைப்பு

எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள,

“அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஒட்டோ டீசல் விலை 24 ரூபாவிலும் மற்றும் முன்பு 10 ரூபாவிலும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4% குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கொள்கலன்போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எமது செயற்குழு தீர்மானித்துள்ளது. என்றார்.

Related posts

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம்

editor

தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்!

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு