உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸின் 11 வது தொற்று நோயாளராக 45 வயதுடைய நபர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் ஜெர்மனிக்கு சென்று வந்தவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

பெரிய வெள்ளியை வீடுகளில் இருந்தே நினைவு கூறுமாறு கோரிக்கை

எரிபொருள் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!