உலகம்

கொரோனா வைரஸ் : சவுதி அரேபியாவில் முதலாவது நபர் இனங்காணல்

(UTV| சவுதி அரேபியா) – சவுதி அரேபியாவில் முதலாவது கொவிட் -19 எனும் (கொரோனா வைரஸ்) பாதிப்புள்ளான ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், ஜோர்தான் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டில் முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை உறுதிப்படுத்தியுள்ளன.

சீனாவில் வேகமாக பரவிவந்த கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸால் தற்போது 58 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. .

இந்த நிலையில், இதுவரை கொரோனா வைரஸால் 89000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஈரான் ஜனாதிபதியின் கொலை பின்னணியில் நாசவேலையா? ஈரானின் அறிவிப்பு

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று