உலகம்

கொரோனா வைரஸ் காரணமாக சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து

(UTV|சீனா) – சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கவிருந்த சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் வுஹான் மற்றும் ஹூபே மாகாணங்களில் அனைத்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹூபேயின் தலைநகரான 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட வுஹானிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.

அத்துடன் குறித்த வைரஸ் தொற்று காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதோடு 600க்கும் மேற்பட்டோர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாசகர்களை ஒழிக்க இந்தியா திட்டம்!

 ஒடுக்குமுறை அனுபவிப்பவர்களுக்கு கனடா அடைக்கலம்!

ரிஷி சுனக் இனது புதிய அமைச்சரவை