உலகம்

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|சீனா) – கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்துள்ளதாக சீனா நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

நேற்றைய தகவலின்படி, சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,011 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இதுவரை யாரும் பார்த்திடாத மோசமான விளைவுகள் ஏற்படும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை

editor

எயார் இந்திய விமானம் 324 பயணிகளுடன் தரையிறக்கம்

சனல் 4 இன் ஆவணப்படம் – ஜெனீவாவில் வெளியானது.