உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆவது மரணம் பதிவானது

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குவைட்டில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இதுவரை நாட்டில் 1148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று…