உள்நாடு

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் தற்போது இல்லை

(UTV|கொழும்பு) – சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் தற்போது இல்லை என தொற்று நோய் ஆய்வு பிரிவின், விசேட நிபுணர் டொக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த கெரோனா வைரஸ், நாட்டில் பரவாதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக விமான நிலையத்தின் சுகாதார பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தடிமன் போன்ற அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் விசேட பரிசோதனைக்குட்படுத்தபடவுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் வுஹான் நகரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி தற்போது ஆரம்பம்

editor

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்