உலகம்

கொரோனா வைரஸ் – இதுவரை 2345 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) –  சீனாவில் வேகமாக பரவி வரும்  கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொவிட்-19 வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது.

ஹூபி பகுதியில் மட்டும் 115 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 75,000 பேர் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்

Related posts

இந்தியாவில் பரவும் புதிய கொரோனா தொற்று – இலங்கைக்கு ஆபத்து

அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணத்தை சீனா விமர்சிப்பு

தாக்குதலுக்கு மத்தியில், ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shafnee Ahamed