உலகம்

கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு

(UTV|ஜப்பான் )- ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் Diamond Princess கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக நீடித்த இந்த பணி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், கப்பலில் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேர் இருந்தனர்.

இதில் 5 இந்தியர்கள் உள்பட மொத்தம் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மனித கடத்தல் விசாரணை – நாடு திரும்பிய இந்தியர்கள்.

ஜப்பானில் அவரச நிலை நீக்கம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில், முதலாது MokeyPox அடையாளம்