உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் கொரோனா தொற்றுடைய மேலும் 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் 38 பேருக்கும் மற்றும் ஆடைத் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் தொடர்புகளை வைவத்திருந்த 72 பேருக்குமெ இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1899 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 3385 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1956 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸிடம் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு!

editor

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு