உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து திரும்பிய ஒருவரும், சேனபுர நிலையத்திலிருந்த ஒருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,838 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,537 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 290 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

editor

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox

மதுபான போத்தல்களுக்கும் QR முறைமை