உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 4 விசேட வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குறித்த 4 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களும், நோய் அறிகுறிகளுடனும் இனம் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் இந்த வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

Related posts

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி