உலகம்

கொரோனாவை தொடர்ந்து எக்ஸ்

(UTV | தென் ஆப்பிரிக்கா) – கொரோனாவைவிட மோசமான உயிர் கொல்லியான எக்ஸ் நோய் ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி உள்ளதாகவும் இது விரைவில் உலக நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளது.

இந்த கொடிய வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக உள்ளது. இந்த வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவியது. 2021 பிறந்த பின்னரும் இது முடிந்தபாடில்லை. இதனால் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இது இவ்வாறிருக்க, எக்ஸ் எனப்படும் ஒரு நோய் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலை காடுகளில் பரவி வருவதாக கூறப்படுகிறது. அது போல் இது உலக நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கொரோனாவை விட அதிக உயிர் பலியை ஏற்படுத்தும் என பெல்சியம் நாட்டு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் தாக்கத்திலிருந்து ஏற்படும் அறிகுறிகள் போலவே தற்போது எக்ஸ் நோய் அறிகுறிகள் இருக்கும். காங்கோவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எக்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார். எக்ஸ் என்றால் எதிர்பாராதது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – இந்தியாவில் 1251 பேருக்கு பாதிப்பு-

மார்ச் 2022-க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம்

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே புதியதொரு வர்த்தக ஒப்பந்தம்