விளையாட்டு

கொரோனாவுக்காக அரைமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

(UTVNEWS | பங்களாதேஷ் ) – உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்து வகையில் அரசுக்கு அரைமாத சம்பளத்தை வழங்க இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.

பங்களாதேஷில் கொரோனா வைரசுக்கு 39 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தடுக்க பங்களாதேஷ் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கிடையே அரசுக்கு உதவும் வகையில் நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் அரைமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர். 27 வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Related posts

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மயங் அகர்வால்!