உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவிலிருந்து இதுவரை 2,121 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி,இதுவரை 2,121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,782 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள 80 எம்.பிக்கள் – முஜிபுர் ரஹ்மான்

editor

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

ஜனாதிபதி மாறினாலும், அரசாங்கம் மாறினாலும் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor