வகைப்படுத்தப்படாத

கொன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில்..

(UDHAYAM, COLOMBO) – பிரிட்டனில் வெளியிடப்பட்டுவரும் பொதுத் தேர்தல் பெறுபேறுகளின்  அடிப்படையில் கொன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் உள்ளது.

650 தொகுதிகளில் 646 தொகுதிகளின் முடிவுகள் சற்று முன்னர்வரை வெளியிடப்பட்டுள்ளன.

அந்தத் தொகுதிகளில் கொன்சர்வேடிவ் கட்சி 315 ஆசனங்களையும், தொழில் கட்சி 261 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை தக்க வைக்க 326 ஆசனங்கள் அவசியம்.

எனினும், கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருக்கின்ற போதும் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்ற நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

කොළඹ ප්‍රදේශ කීපයකට අඩු පීඩනයක් යටතේ ජලය බෙදාහැරේ.

இனவாத அடிப்படையில் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது – ஜனாதிபதி

கட்சித் தலைவர்கள் இன்று கூடுகின்றனர்..!