மத்திய மாகாணத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவில் வசிப்பவர்களும், கொத்மலை ஓயாவிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்துபவர்களும் இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா செல்பவர்கள் கொத்மலை ஓயாவில் குளிக்க திட்டமிட்டால் இது குறித்து கவனம் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.