உள்நாடுபிராந்தியம்

கொத்மலையில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் பாகங்கள் மீட்டெடுப்பு

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ்ஸின் பாகங்கள் பள்ளத்திலிருந்து மீட்டெடுத்து கொண்டுவரப்பட்டுள்ளன.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கிரேன் உதவியுடன் இந்தப் பேருந்தின் பாகங்களை மீட்டுள்ளனர்.

பின்னர் குறித்த பஸ்ஸின் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இலஞ்சம் பெற்ற பெண் அதிபர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

editor

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும்

மற்றுமொரு எரிபொருள் தாங்கி இன்று நாட்டிற்கு