உள்நாடு

கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இன்று

(UTV | கொழும்பு) – அமரபுர நிக்காயவின் மறைந்த மகாநாயக்கர், கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள், இன்று(25) பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளன.

இதனை முன்னிட்டு, இன்று துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமரபுர நிக்காயவின் மறைந்த மகாநாயக்கர், கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், மதுபான நிலையங்கள் என்பனவற்றை இன்றைய தினம் மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

கடந்த 24 மணி நேரத்தில் 639 : 04 [COVID UPDATE]

கனடாவில் ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் வலுப்படுத்தப்படும் சட்டங்கள் – பியர் பொலியர்