கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16ஆவது லேன் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு 13, பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.
