உள்நாடுசூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.  

இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் வயது 37 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது,  சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் பொலிஸார் உட்பட இராணுவத்தினர் விரைந்துள்ளனர்.

Related posts

ஹெரோயினுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது

மாவை ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடம் – யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் இரங்கல்

editor

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்