சூடான செய்திகள் 1

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்

(UTV|COLOMBO)-அத்துருகிரிய – ஹோகந்தர கிழக்கு பிரதேசத்தில் நேற்று பிற்பகல் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான திலங்க மதுசான் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த இளைஞன் வீட்டில் இருந்த போது சந்தேக நபர் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை அத்துருகிரிய காவல்துறை ஆரம்பித்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார்

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்