சூடான செய்திகள் 1

கொச்சிக்கடை,கட்டான பிரதேசங்களை சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் கைது

(UTV|COLOMBO)-கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி வீடொன்றினுள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கி பணம் கொள்ளையிட்ட மூன்று பேரை காவற்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் கொள்ளையிட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவில் ஒரு தொகையினையும் , கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட உந்துருளியொன்றும் இதன் போது காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை மற்றும் கட்டான பிரதேசங்களை சேர்ந்த 32 , 36 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்