வகைப்படுத்தப்படாத

கொக்கிளாய் சிங்கள பாடசாலையில் வெடிப்பு!

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்திலுள்ள முகத்துவாரம் சிங்கள பாடசாலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று, இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குப்பைகளை அகற்றி தீவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக அதிர்ச்சிக்குள்ளாகிய 8 மாணவர்கள் முல்லைத்தீவு, மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களால் சேகரிக்கப்பட்ட குப்பைகள் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளது.

அதன்போது, குப்பையின் ஒரு பகுதி பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெடிப்பு இடம்பெற்றபோது அருகில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் முல்லைத்தீவு காவல்துறையினர் கூறினர்.

Related posts

No-confidence motion against Govt. defeated

30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை…

කැබිනට් රැස්වීම පවත්වන වෙලාවේ වෙනසක්