சூடான செய்திகள் 1

கைவிடப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் வயல் பரப்பு

(UTV|COLOMBO)-கைவிடப்பட்ட வயல்களில் மீண்டும் பயிர்செய்கை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை பெரும்போகத்தில் 27 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சிறுபோகத்தின் போது கைவிடப்பட்டிருந்த 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் வயல் பரப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 14 ஆம் ஏக்கர் நிலப்பரப்பு பயிர் செய்வதற்கு சிறப்பான மட்டத்தில் உள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்

இன்று முதல் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகமாகக்காணப்படும்