உள்நாடு

கைது செய்வதைத் தடுக்க கோரி சட்டத்தரணி வன்னிநாயக்கவின் மனுவிற்கு திகதியிடப்பட்டது

தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இந்த மனு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, மனுதாரர் சட்டத்தரணி வன்னிநாயக்க நேற்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறிவித்தார்.

மனுதாரர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, நீதிமன்றத்தின் முன்னிலையில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுவைத் தொடர்வது குறித்து அறிவிப்பதற்காக திகதியை வழங்குமாறு கோரினார்.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய ஆகியோரும் இந்தக் கோரிக்கையுடன் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நவம்பர் 10 ஆம் திகதி குறித்த மனுவை மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டது.

Related posts

தேசபந்து தென்னகோன் தொடர்பான சாட்சியங்கள் பூர்த்தி!

editor

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ விபத்து

editor

வாக்களிக்க விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாதகாலம் சிறை – பெப்ரல் அமைப்பு எச்சரிக்கை

editor