சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட கைதி C.I.D யில் ஒப்படைப்பு

(UTV|COLOMBO)-மீமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் வீரக்கொடிகே சுனில் சாந்த என்ற அஜித் வீரசிங்க மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காவற்துறை மா அதிபரின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்ள அவரை இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெலிகடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர் மீமுர பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

 

 

 

Related posts

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

2015 ஜனவரி 8 மக்கள் ஆணையின்படி அரச பயணம் தொடரும் – பிரதமர்

பொதுப் போக்குவரத்து பயன்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல்