அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் MHM மின்ஹாஜ் பிணையில் விடுதலை

நேற்று (09) இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் இன்று (10) காலை பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

கற்பிட்டி ப.நோ.கூ சங்கம் தொடர்பில்
அரச உத்தியோகத்தருக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் நேற்று (09) இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுரைச்சோலை வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்பாளராக களம் இறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-UTV செய்திப்பிரிவு கொழும்பு

Related posts

2021ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள்

ஏமாற்றியது போதும், தயவு செய்து தீர்வை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச

editor

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு