உள்நாடு

கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வருக்கும் பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்குத் தேவையற்ற நேரத்தில், கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஒரு மணி நேரத்திற்கு 2,000 கிலோ மீன்களை பொதி செய்யக்கூடிய உயர் திறன் கொண்ட மீன் பொதியிடல் இயந்திரத்தை கொள்வனவு செய்தமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொள்வனவு மூலம் அரசாங்கத்திற்கு 5,856,116 ரூபா இழப்பை ஏற்படுத்தி, ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது.

Related posts

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் மருத்துவர்களின் எச்சரிக்கை

மருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

கொரோனாவிலிருந்து 562 பேர் குணமடைந்தனர்