அரசியல்உள்நாடு

கைதுகளில் பெரும்பாலானவை அரசியல் கண்காட்சி – வஜிர அபேவர்தன

இலங்கையில் இடம்பெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

அதனாலே நூறு பேர் கைது செய்யப்பட்டால் அதில் 98 பேர் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்த கலாசாரத்தை அரசியலமைப்பு திருத்தம் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

யாராவது ஒரு நபர் கைதுசெய்யப்பட்டால் அது தண்டனையாக கருதப்படுவதில்லை என அரசியலமைப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இலங்கையில் யாராவது கைதுசெய்யப்பட்டால், தண்டனையாக அவருக்கு கை விலங்கிடப்பட்டு, அரசியல் கண்காட்சி இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் இந்த நடவடிக்கை உலக நாடுகளில் இதனைவிட மாற்றமாகும். இந்தியா, ஜப்பான், அமெரிக்க அரசியலமைப்பில் இந்த உறுப்புரை இதனைவிட மாற்றமானதாகும். ஜப்பானில் விசாரணை மேற்கொண்டே கைதுகள் இடம்பெறுகின்றன.

100பேரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், 98 பேர் குற்றவாளியாகின்றனர். ஆனால் இலங்கையில் 100பேரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், 98பேர் குற்றமற்றவர்களாக வீடுசெல்கிறார்கள்.

அதனால் இந்த கலாசாரத்தை மாற்றுவதாக இருந்தால், அரசியலமைப்பில் இந்த உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

விசாரணைகளை பலப்படுத்த வேண்டி இருக்கிறது. விசாரணைகளின் அறிக்கையின் பிரகாரமே நீதிமன்றம் செயல்படுகிறது.

இலங்கையில் இதுதொடர்பான புள்ளிவிபரங்களை பார்த்தால், 100பேர் கைதுசெய்யப்பட்டால், இரண்பேர் குற்றவாளியாக்கப்படுகின்றனர். 98பேர் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படுகின்றனர். அதனால் இலங்கையில் கைதுகள் அரசியல் கண்காட்சியாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அரசியல் கண்காட்சியை எதிர்காலத்தில் அரசியலமைப்பு உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொண்டு இல்லாமலாக்க வேண்டும். குற்றச்சாட்டு ஒன்றுக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டால், அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த அவர்களிடம் இருக்கும் ஆதாரத்தைவிட, கைது செய்யப்பட்டவர் தான் நிரபராதி என்பதற்கு 95 வீத ஆதாரம் இருந்தால், கைது செய்தவர்களிடம் அறவிட முடியுமான வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் : வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை

கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்தும் சரிவு

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்