உள்நாடு

கைதிகள் தப்பியோட்டம் – 02 கைது

(UTV | கொழும்பு) –  கைதிகள் தப்பியோட்டம் – 02 கைது

தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

09 இளைஞர்கள் இன்று (17) அதிகாலை சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

எவ்வாறாயினும், அவர்களுள் இரு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் , ஏனைய 07 பேரைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

editor

ஆறு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்களை அழைக்குமாறு உத்தரவு

editor