உள்நாடுபிராந்தியம்

கைதான 30 இராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (09) மாலை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 30 மீனவர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று (9) காலை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு , திணைக்கள அதிகாரிகளின் பதிவு நடவடிக்கைகளுக்கு பின்னர் இன்று (9) மாலை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் .

குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

-மன்னார் நிருபர் லெம்பட்

Related posts

இரத்தினபுரி வைத்தியசாலை வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

editor

 உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் – இன்று தீர்மானம்

இம்ரானுடனான சந்திப்பு உறுதியானது