சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) இன்று(05) காலை வாகனம் ஒன்றில் சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து  கடத்தப்பட்ட சுமார் 115 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம் : ரத்ன தேரர்

நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்-(படங்கள்)