உள்நாடு

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|THOPPUR) – பொலிஸாரின் ஒருங்கிணைப்பில் கடந்த 03 ஆம் திகதி தோப்பூரின் கதிரவேலி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி, போலிசாருடன் ஒருங்கிணைந்து கடற்படை தோப்பூரின் கதிரவேலி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 300 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 21 மற்றும் 31 வயதுடைய தோப்பூர் மற்றும் தங்கநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை தோப்பூர் போலிசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related posts

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் – வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் ஆதம்பாவா எம்.பி ஆரம்பித்து வைத்தார்

editor

IMF உடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

editor

முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வதனை ஏற்க முடியாது – இம்ரான் எம்.பி

editor