உள்நாடுபிராந்தியம்

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் கடற்படையினர் ஈடுப்பட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன்போது படகில் 250 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டதை அடுத்து, அதனை மீட்ட கடற்படையினர், படகில் இருந்த மூவரையும் கைது செய்ததுடன் படகையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, படகு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

பால்மாவின் விலை மேலும் குறைவடையும்

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி” – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!