வகைப்படுத்தப்படாத

கேரளாவில் நீடிக்கும் கன மழை

(UTV|INDIA)-கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. மழைக்கு இதுவரை மாநிலம் முழுவதும் 20 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேங்கிய மழைநீர் வழிந்தோட வழியில்லாததால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. சில இடங்களில் தெருக்களில் நிறுத்தி இருந்த கார்களும் மூழ்கிவிட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Spider-Man: Far From Home චිත්‍රපටය ඇ.ඩො මිලියන 600ක් උපයයි.

பரீட்சை ரத்து : அரசாங்க தகவல் திணைக்களம்

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைக்காவும் முன்நிற்பேன் – ஜனாதிபதி