உள்நாடு

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரை தாக்கிய நபர் கைது

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) பிற்பகல் கேகாலை பொது வைத்தியசாலையின் முன்னாள் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக விசேட வைத்திய நிபுணரை குறித்த நபர் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியில் வசிக்கும் 29 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த வைத்தியர் தற்போது கேகாலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

நகரசபையால் அகற்றப்படும் நடைபாதை வியாபார நிலையங்கள்!

தமிழர்கள் உரிமையுள்ளவர்களாக வாழ 13ஆவது திருத்த சட்டமே அவசியம் – சந்திரசேகரன்.