உள்நாடு

கெஹெலியவின் மகன் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் இன்று ( 21) ஆஜராகியுள்ளார்.

கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி நேற்று (20) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நீதிவான் அனுமதி வழங்கினார்.

அதன்படி, வாக்குமூலம் அளிக்குமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவின்படி, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Related posts

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

editor

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பின் 2வது வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு