வகைப்படுத்தப்படாத

கெட்டபுலா தமிழ் இளைஞர்களுக்கான முச்சக்கரவண்டி வாகன தரிப்பிடம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – நாவலப்பிட்டி கெட்டபுலா சந்தியில் தமிழ் இளைஞர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை எவ்வித இடையூகளுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

கெட்டபுலா சந்தியில் தமிழ் இளைஞர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பிடத்துக்கான பெயர்ப்பலகையை அப்புறப்படுத்துவதற்கு பிரதேச அரசியல்வாதி ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து நான் நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தினேன். இதன் பின்பு நாவலப்பிட்டி பொலிஸ்   நிலையத்தில்  குறிப்பிட்ட தரிப்பிட  முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் பொறுப்பதிகாரிக்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றது.இதன் போது முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டு சுமுகமாக நடந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய  மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

நோட்டன் பிரிிிிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Related posts

CEYPETCO resumes fuel distribution to CEB [UPDATE]

Ex-UNP Councillor Royce Fernando Remanded

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு