உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்

அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் நேற்று வியாழக்கிழமை (07) இரவு அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த பெண்ணே கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நீண்டகால குடும்ப தகராறில் நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்!

வீடியோ | உலமா சபையுடன் நாமல் பேசியது என்ன.? உலமா சபையின் விளக்கம்

editor

கோட்டாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றிற்கு அறிவிப்பு!