உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயதான இளைஞன் கொலை – வவுனியாவில் சோகம்

வவுனியா – செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் குழுவொன்றினால் குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்காக செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் : மூன்றாம் நாள் விவாதம் இன்று

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை