உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையை சீதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சீனிக்கு இன்றும் நாளையும் கலந்துரையாடல்

நிதியமைச்சர் தலைமையில் புதிய குழு

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு தேவைக்கு அதிகமாகவே சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிட்டது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor