மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார்.
சம்பவ தினமாக நேற்று (27) மாலை உயிரிழந்த நபர் மேலும் மூவருடன் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு சந்தேகநபர் மற்றும் வீட்டாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் அருகிலுள்ள கூர்மையான ஆயுதத்தால் ஒருவரின் கழுத்தில் தாக்கியதுடன், மற்றொரு நபரை வெட்டி காயப்படுத்தியதாக தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.