உள்நாடு

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

(UTV|கொழும்பு) – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த 3 பேர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் 05 ஆம் திகதிக்குள்

editor

பொரளையில் துப்பாக்கிப் பிரயோகம்!

editor