உள்நாடு

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(09) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் தொடர்பிலும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேசியப் பட்டியல் உறுப்பினராக தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி தன்னிச்சையான தீர்மானம் மேற்கொண்டதாக ஏனைய பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட் என்பன அதிருப்தி வெளியிட்டிருந்தன.

Related posts

காத்தான்குடி சுற்றுலா அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்!

editor

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை